இடைவேளை இல்லாமல் ஒரு தமிழ் படம்!

தயாரிப்பாளராகும் இசை அமைப்பாளர்!

செய்திகள் 7-Nov-2016 12:15 PM IST VRC கருத்துக்கள்

‘ரௌத்திரம்’ படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் கவனம் பெற்றவர் பிராகாஷ் நிக்கி. இவரும், கலைசெல்வன் மாருதி என்பவரும் சேர்ந்து 3டி ஹாரர் படம் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். இதில் ஒரு புதிய முயற்சியாக 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தை இடைவேளை இல்லாமல் எடுக்க திட்டமிட்டுள்ளார்கள். இது தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாகும். ஹாலிவுட்டில் இதுபோன்று இடைவேளையில்லாமல் நிறைய படங்கள் வெளியாகியுள்ளது என்று கூறும் பிரகாஷ் நிக்கி, அந்த அனுபவத்தை தமிழ் ரசிகர்களும் பெறவேண்டும் என்ற நோக்கமே இந்த புதிய முயற்சிக்கு காரனம் என்கிறார். இந்த படம் குறித்த கூடுதல் விவரங்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

#PrakashNikki #Rowthiram #KalaiSelvanMaruthai #Jiiva #Shriya #Gokul

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;