இன்று, ‘செவாலியர்’ கமல்ஹாசன் பிறந்த நாள்!

இன்று, ‘செவாலியர்’ கமல்ஹாசன் பிறந்த நாள்!

செய்திகள் 7-Nov-2016 10:58 AM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசன் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளை தனது நற்பணி மன்றத்தினருடன் பல்வேறு நற்பணிகளை மேற்கொண்டு கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த வருட பிறந்த நாளை, தமிழ முதல்வர் உடல்நலம் இன்றி சிகிச்சை பெற்று வரும் நிலையில் கொண்டாட விரும்பாத கமல்ஹாசன், இது குறித்த அறிவிப்பை தனது ரசிகர்களுக்கு ட்விட்டர் மூலம் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனால் கமல்ஹாசனின் இந்த வருட பிறந்த நாள் எந்தவித கொண்டாட்டங்களும் இன்றி இன்று (நவம்பர்-7) நடைபெறுகிறது என்றாலும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதை நாம் பெருமையாக எடுத்துக்கொள்ளலாம்! காரணம், இந்திய சினிமாவின் சிறந்த கலைஞர்களுக்குள் ஒருவராக, கலைஞானியாக, உலகநாயகனாக திகழ்ந்து வரும் கமல்ஹாசன் இந்திய சினிமாவில் ஆற்றிய பணிகள் ஏராளம்! தேசிய விருது, செவாலியர் விருது என அவர் வாங்கி குவித்த விருதுகள் ஏராளம்! இன்று பிறந்த நாள் காணும் இந்த மகா கலைஞனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப்10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது.

#KamalHaasan #SabashNaidu #Ulaganayagan #Thoongavanam #Papanasam #Vishwaroopam2 #UttamaVillan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ


;