துட்டுக்காக ‘வண்டி’யில் பயணம் செய்யும் விதார்த்!

விதார்த் நடிக்கும் வண்டி!

செய்திகள் 7-Nov-2016 10:41 AM IST VRC கருத்துக்கள்

‘ரூபி ஃபிலிம்ஸ்’ ஹஷீர் வழங்க, விதார்த் நடிப்பில் ‘ வண்டி - Journey With Duttu’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராஜேஷ் பாலா கதை, எழுதி இயக்கி வரும் இப்படத்தில் விதார்த் கதாநாயகனாக நடிக்கிறார். சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகனாக கணேஷ் பிரசாத் நடிக்கிறார். கதாநாயகனின் நண்பர்களாக கிஷோர், ஸ்ரீராம் கார்த்திக் ஆகியோர் நடிக்கின்றனர். போலீஸ் அதிகாரியாக ஜான் விஜய் நடிக்கிறார். அருள்தாஸ் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் நகைச்சுவை கேரக்டர்களில் ‘லொள்ளு சபா’, சாமிநாதன், மதன் பாப் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ராகேஷ் நாராயணன் ஒளிப்பதிவில் வளர்ந்து வரும் இப்படத்துக்கு சுராஜ் எஸ்.குரூப் இசையமைக்கிறார். ரீசால் ஜெய்னி படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கத்தை மோகன மகேந்திரன் கவனிக்கிறார். காமெடி த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற்று முடிவுபெறவிருக்கிறது.

#VandiMovieLaunch #Vandi #Viddarth #RubiFilms #Chandini #RajeshBalaji

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வண்டி ட்ரைலர்


;