கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி இணையும் படம்!

கௌதம் கார்த்திக் படத்தை வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்!

செய்திகள் 7-Nov-2016 10:21 AM IST VRC கருத்துக்கள்

‘முத்துராமலிங்கம்’, ‘இவன் தந்திரன்’ உட்பட சில படங்களில் நடித்து வரும் கௌதம் கார்த்திக் அடுத்து நடிக்கும் படத்திற்கு ‘ஹர ஹர மகாதேவகி’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை ‘தங்கம் சினிமாஸ்’ சார்பில் எஸ்.தங்கராஜ் தயாரிக்கிறார். இப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரவிமரியா, நமோ நாராயணன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்பட்த்தை சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் இயக்குகிறார். ‘எங்கேயும் எப்போதும்’ பட இயக்குனர் சரவணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இவர். இந்த படத்திற்கு பாலமுரளி பாலு இசை அமைக்கிறார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். காமெடி படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் துவக்கவிழா நேற்று நடைபெற்றது. வரும் 23-ஆம் தேதி படப்பிடிப்பு துவங்கும் இப்படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா வெளியிடுகிறார்.

#Guathamkarthik #NikkiGalrani #HaraHaraMahadevaki #ThangamCinemas #SThangaraj #SanthoshPeterJayakumar #StudioGreen

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடவுள் இருக்கான் குமாரு - கும் சாரே பாடல் வீடியோ


;