விஷ்ணு விஷாலின் கதாநாயகன்!

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரனை தொடர்ந்து கதாநாயகன்!

செய்திகள் 5-Nov-2016 4:03 PM IST VRC கருத்துக்கள்

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படம் மூலம் தயாரிப்பிலும் களம் இறங்கி வெற்றி கண்டவர் நடிகர் விஷ்ணு விஷால்! 50 நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றிப் பெற்ற இப்படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது தயாரிப்பில் இப்போது பிசியாகியுள்ளார் விஷ்ணு விஷால்! இந்த படத்தை முருகானந்தம் இயக்குகிறார் என்றும் இந்த படத்தில் விஷ்ணுவிஷாலுடன் கதாநாயகியாக கேத்ரின் தெரெசா நடிக்கிறார் என்றும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது என்றும் சமீபத்தில் செய்தியை வெளியிட்டிருந்தோம். பெயர் வைக்காமல் துவங்கப்பட்ட இப்படத்திற்கு இப்போது ‘கதாநாயகன்’ என்று பெயர் சூட்டியுள்ளார் விஷ்ணு விஷால்! இதே டைட்டிலில் முகதா சீனிவாசன் இயக்கத்தில் பாண்டிராஜன், ரேகா நடித்து 1988-ஆம் ஆண்டு ஒரு படம் வெளிவந்திருந்தது. இப்போது அதே டைட்டில் விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் படத்திற்கு தலைப்பாகியுள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார்.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ள ‘மாவீரன் கிட்டு’ இம்மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Kathanayagan #Vishnuvishal #CatherineTresa #Muruganantham #VelainuVandhuttaVellaikaran #Pandiarajan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;