தினேஷ், நந்திதா நடித்த படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட்!

‘யு’ சர்டிஃபிக்கெட்டுடன் வெளியாகும் உள்குத்து!

செய்திகள் 5-Nov-2016 12:46 PM IST VRC கருத்துக்கள்

‘திருடன் போலீஸ்’, ‘ஒரு நாள் கூத்து’ ஆகிய படங்களை தொடர்ந்து ’கெனன்யா ஃபிலிம்ஸ்’ ஜெ.செல்வகுமார் தயாரிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் ‘உள் குத்து’. ‘அட்டகத்தி’ தினேஷ், நந்திதா, பால சரவணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை கார்த்திக் ராஜு இயக்கியுள்ளார். விரைவில் ரிலீசாகவிருக்கிற இப்பம் சென்சார் குழுவினரின் பார்வைக்கு சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் ‘உள் குத்து’விற்கு ‘U‘ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இதனால் ‘உள் குத்து’ டீம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ‘உள் குத்து’ படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை கே.எல்.பிரவீன் கவனித்துள்ளார்.

#Ulkuthu #AttakathiDinesh #Nandita #ThirudanPolice #OruNaalKoothu #KenanyaFilms #JSelvakumar #CaarthickRaju

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 3


;