‘‘கேப்’பும் இல்லை ஆப்பும் இல்லை’’ -‘கத்திசண்டை’ விழாவில் வடிவேலு!

‘கத்திசண்டை’யில் வடிவேலு இல்லை என்றால் நானும் இல்லை! - விஷால்

செய்திகள் 5-Nov-2016 12:24 PM IST VRC கருத்துக்கள்

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு முதலானோர் இணைந்து நடித்துள்ள படம் ‘கத்திசண்டை’. ‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்தை தமிழகமெங்கும் ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. ஆதி இசை அமைத்திருக்கும் இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு காமெடி கேரக்டரில் நடித்திருக்கும் வடிவேலு பேசும்போது,

‘‘நான் ஒரு ‘கேப்’புக்கு பிறகு இப்படத்தில் நடித்திருப்பதாக சொல்கிறார்கள். உண்மையில் எனக்கு கேப்பே கிடையாது. எனக்கு எப்போதுமே ‘கேப்’பும், ஆப்பு வந்ததில்லை! நான் எப்போதுமே ‘டாப்’ தான்! என்னிடம் வந்த கதைகள் சரியில்லாததால் தான் அந்த கதைகளில் நடிக்கவில்லை. ஆனால் எந்த பேப்பர், வாட்ஸ்-அப், டிவி சேனல் எடுத்தாலும் நான் தான் கார்ட்டூன் பொம்மையாக வருகிறேன். அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூட நான் தான் காமெடியன்! இதற்கு என்னுடைய உழைப்புதான் காரனம். 24 மணிநேரமும் நான் சினிமாவை பற்றி மட்டுமே சிந்திக்கிறேன்.

‘கத்திசண்டை’ என்றதும் இது கத்தியால் சண்டை போடும் படம் என்று யாரும் நினைத்து விடவேண்டாம்! இது புத்தியால் சண்டை போடும் படம். இதில் நான் ஒரு டுபாகூர் டாக்டராக நடிக்கிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு சிரித்து மகிழ கூடிய ஒரு படமாக இந்த ‘கத்திசண்டை’ உருவாகியிருக்கிறது. இது எல்லோருக்கும் சரியான ஒரு காமெடி படமாக இருக்கும்’’ என்றார் வடிவேலு!

தொடர்ந்து விஷால் பேசும்போது, ‘‘இப்படத்தில் வடுவேலு அவர்களும் நடிக்கிறார் என்பதால் தான் நான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். வடிவேலு சார் இப்படத்தில் நடிக்கவில்லை என்றால் இந்த கதையை நானும் ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன். ‘திமிரு’ படத்தில் என்னுடன் நடித்திருந்தார் வடிவேலு சார். அதற்கு பிறகு பரபரப்பாக நடந்த நடிகர் சங்க தேர்தலில் எங்களுடன் பக்கபலமாக இருந்து எல்லோரையும் ஜெயிக்க வைக்க உதவினார்! இப்போது மூன்றாவது முறையாக நாங்கள் இருவரும் ‘கத்திசண்டை’யில் இணைந்திருக்கிறோம். இந்த படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும்’’ என்றார்.

இந்த படம் இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

#KaththisandaiAudioLaunch #Kaththisandai #Vishal #Tamannah #Suraaj #Vadivelu #Soori #HipHopThamizha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;