‘இளமி’யில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய ஜல்லிக்கட்டு!

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் ‘இளமி’

செய்திகள் 5-Nov-2016 11:44 AM IST VRC கருத்துக்கள்

‘சாட்டை’ படத்தில் கதாநாயகனாக நடித்த யுவன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘இளமி’. ‘ஜோ புரொடக்‌ஷன்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரிக்கிறார் ஜே.ஜூலியன் பிரகாஷ். இவர் இயக்குனர் ரவிமரியாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

‘இளமி’ குறித்து இயக்குனர் ஜூலியன் பிரகாஷ் கூறும்போது, ‘‘இது முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை பற்றிய படம். நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஜல்லிக்கட்டு இப்போது உள்ள ஜல்லிக்கட்டு மாதிரி இல்லை. மாட்டை ஓட விட்டு பின்னால் ஓடி அடக்குவது இப்போதைய ஜல்லிக்கட்டு. சீறி வரும் காளையை நேருக்கு நேர் நின்று மேல் சட்டை எதுவுமின்றி காளையை அடக்கி வெற்றி பெறுவதுதான் அப்போதைய நிஜ ஜல்லிக்கட்டு! அதை தான் இப்படத்தில் பதிவு செய்துள்ளோம். மெய்சிலிர்க்க வைக்கும் சம்பவங்களுடன் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் ரசிகர்களுக்கு நிஜ ஜல்லிக்கட்டை நேரில் பார்ப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும்’’ என்றார்.

இப்படத்தில் யுவனுடன் கதாநாயகியாக அனுகிருஷ்ணா நடிக்கிறார். இவர்களுடன் ரவிமரியா, பாண்ட்ஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கான டல்களை பழனிபாரதி, ஜீவன் மயில், ராஜாகுருசாமி ஆகியோர் எழுதியுள்ளனர். ஸ்ரீகாந்த தேவா இசை அமைக்கிறார். யுகா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

#Ilami #Yuvan #Sattai #JulienPrakash #RaviMaria #Kishore #AnuKrishna #PazhaniBharathi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;