ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பில் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் தயாரிக்கும் படம் ‘அண்டாவை காணோம்’. ஸ்ரேயா ரெட்டி முக்கிய கேரக்டரில் நடிக்கும் இப்படத்தில் தீபக் உட்பட பல புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இயக்குனர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வேல்மதி இயக்கி வரும் இப்படம் தேனி அருகே நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் எடுக்கப்படும் படமாம்! முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வருகி வரும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசரை நாளை காலை 10.30 மணிக்கு நடிகை ஹன்சிகா இணையதளத்தில் வெளியிடவிருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#AndavaKaanom #SriyaReddy #Hansika #JSKFilm #Sathish #Velmathi #Deepak
சிம்பு அடுத்து நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படம் குறித்த தகவல்களை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம்....
ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாகநடிக்கும் படம் ‘மஹா’. U.R.ஜமீல் இயக்கும் இந்த படத்தில் சிம்புவும்...
‘பூவரசம் பீப்பி’ படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம்...