விஜய் ஆன்டனியின் ‘சைத்தான்’ ரிலீஸ் தேதி, சென்சார் ரிசல்ட்!

வியாழக் கிழமை சென்டிமென்டில் விஜய் ஆன்டனியின் சைத்தான்!

செய்திகள் 5-Nov-2016 10:46 AM IST VRC கருத்துக்கள்

நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் படங்களை தொடர்ந்து விஜய் ஆன்டனி நடிப்பில் வெளியாகவிருக்கிற படம் ‘சைத்தான்’. அறிமுக இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இம்மாதம் 18-ஆம் தேதி ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ஒரு நாள் முன்னதாக இப்படத்தை 17-ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். வழக்கமாக புதிய படங்களின் ரிலீஸ் வெள்ளிக் கிழமைகளில் தான் இருந்து வந்தது. ஆனால் சமீபகாலமாக வெள்ளிக் கிழமைக்கு பதிலாக ஒரு நாள் முன்னதாக வியாழக் கிழமைகளிலும் படங்களை ரிலீஸ் செய்து வருகிறார்கள். வசூல் விஷயங்களை கருத்தில் கொண்டு இந்த புதிய முயற்சியை பின் பற்றி வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் ‘ஆரா சினிமாஸ்’ நிறுவன அதிபர் மகேஷ் சாய் பாபா பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. வியாழக்கிழமை என்பது சாய் பாபாவுக்கு உகந்த நாள் என்பது என்ற சென்டிமெண்டும் சைத்தான் ரிலீஸில் இடம் பெறுகிறது. சென்சாரில் U/A சர்டிஃபிக்கெட் வாங்கியிருக்கும் சைத்தான் தமிழ் தெலுங்கு மொழிகளில் ஒரே நாளில் வெளியாகிறது.

#VijayAntony #Saithan #Salim #Naan #IndiaPakistan #Picchaikaaran #PradeepKrishnamoorthy #VijayAntonyFilmCorporation

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;