‘ஈட்டி’ இயக்குனருடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்குமார்!

அதர்வாவை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷை இயக்கும் ‘ஈட்டி’ இயக்குனர்!

செய்திகள் 4-Nov-2016 3:16 PM IST VRC கருத்துக்கள்

அதர்வா கதாநாயகனாக நடித்து ரவி அரசு இயக்கிய படம் ‘ஈட்டி’. மைக்கேல் ராயப்பன் தயாரித்த இப்படம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி வெற்றி பெற்றது. அதர்வாவை வைத்து ‘ஈட்டி’யை இயக்கிய ரவி அரசு அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தை சமீபத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘றெக்க’ படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்றும், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்கும் என்று சொல்லப்படுகிறது. தற்போது இதன் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இருக்கும் ரவி அரசு, இந்த வேலைகள் முடிந்ததும் இப்படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வில் ஈடுபட உள்ளார். இந்த படம் முடிந்த பிறகு ‘ஈட்டி’யின் தெலுங்கு ரீ-மேக்கை இயக்கவும் முடிவு செய்துள்ளார் ரவி அரசு!

#GVPrakashKumar #Eetti #Atharva #RaviArasu #VijaySethupathi #Rekka #SriDivya #MichealRoyappan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரியாத புதிர் - டிரைலர்


;