‘‘AK57 படத்தின் முக்கிய அம்சமே ரொமான்ஸ்தான்’’ - மனம்திறந்த காஜல்

அஜித்குமார் நடிக்கும் 57வது படத்தின் முக்கிய அம்சமே காதலும், ரொமான்ஸும்தான் என ஹீரோயின் காஜல் அகர்வால் மனம் திறந்துள்ளார்

செய்திகள் 4-Nov-2016 12:03 PM IST Chandru கருத்துக்கள்

சமீபகால அஜித் படங்களில் ஆக்ஷனுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் காதலுக்கோ, ரொமான்ஸுக்கோ கொடுக்கப்படுவதில்லை. படத்தில் ஹீரோயின் இருக்கிறாரே என்பதற்காகவே டூயட் பாடலையும், காதல் காட்சிகளையும் இணைத்திருப்பார்கள். அந்தவகையில், தற்போது சிவா இயக்கிவரும் அஜித்தின் 57வது படமும் இப்படித்தான் இருக்கும் என்பது யாருக்குதான் தெரியாது. ஆனால், இப்படம் குறித்த காஜல் அகர்வால் உதிர்த்திருக்கும் வார்த்தைகள் ‘தல’ ரசிகர்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இன்டர்நேஷனல் போலீஸாக அஜித் நடிக்கும் இப்படத்தின் முக்கிய அம்சமே காதலும், ரொமான்ஸும்தான் என சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம்திறந்திருக்கிறார் படத்தில் நாயகியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால். இப்படத்தில் அஜித்தின் காதல் மனைவியாக நடித்துள்ளார் காஜல். அதோடு, ‘தன்னை காஜல் ஜி என மரியாதையாக அழைப்பதையும்’ பெருமையாக அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் காஜல்.

#AjithKumar #AK57 #KajalAggarwal #SiruthaiSiva #SathyaJothiFilms #Anirudh #Karunakaran #Thala57

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தொடரி - டிரைலர்


;