விஜய்சேதுபதி - சமந்தா படத்தில் 6 இயக்குனர்கள்!

விஜய்சேதுபதி - சமந்தா நடிக்கும் படத்திற்காக தியாகராஜன் குமாரராஜாவுடன் இணைந்து மேலும் 5 இயக்குனர்கள் வசனம் எழுதுகிறார்கள்

செய்திகள் 4-Nov-2016 11:41 AM IST Chandru கருத்துக்கள்

இப்படி ஒரு கூட்டணி அமையும் என யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. ஆம்... ‘ஆரண்யகாண்டம்’ படத்திற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார் எனவும், அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார் என்பதும், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பதும் எத்தனை சர்ப்ரைஸான செய்தி. இந்த ஆச்சரியத்தில் விழியை விரித்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு சந்தோஷ அதிர்ச்சி காத்திருக்கிறது.

ஆம்... இப்படத்தின் வசனங்களை தியாகராஜன் குமாரராஜாவோடு இணைந்து மேலும் 5 இயக்குனர்கள் எழுதவிருக்கிறார்களாம். இதற்காக ஏற்கெனவே மிஷ்கினும், நலன் குமாரசாமியும் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள். மற்றவர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#AaranyaKaandam #ThiyagarajanKumararaja #VijaySethupathi #Samantha #NalanKumarasamy #Mysskin #YuvanShankarRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;