அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு முன்பு துவக்கப்பட்டு, பின்னர் சிற்சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டேபோய் கடந்த மாதம்தான் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்தது ‘அச்சம் என்பது மடமையடா’. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு கௌதம், சிம்பு, ரஹ்மான் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படம் தற்போது ரசிகர்களின் பார்வைக்கு கொண்டுவரப்படவுள்ளது. முதல்பாதி ரொமான்ஸ், இரண்டாம்பாதி ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்திற்கு சென்சாரில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. அதோடு படம் நவம்பர் 11ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது.
‘ஒன்றாக’ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், கௌதம் மேனன் இயக்கியுள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள்தான் அனைத்தும் ஏற்கெனவே வைரல் ஹிட்டாகியுள்ளன.
#AchchamYenbadhuMadamaiyada #STR #ManjimaMohan #GauthamMenon #ARRahman #OndraagaEntertainment #AYM
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்புசமீபத்தில் தாய்லாந்த் -...
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி...