இயக்குநர் சுந்தர்.சி ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளராக அறிமுகமான ‘ஆம்பள’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் ‘‘ஹிப்ஹாப் தமிழா ஆதிதான் என்னுடைய அடுத்த படத்தின் ஹீரோ’’ என்று கூறி இருந்தார். அதன் பின் ஆதியை நடிக்குமாறு கூறி வந்த இயக்குநர் சுந்தர்.சி. ‘டக்கரு டக்கரு’ பாடல் வீடியோவை பார்த்துவிட்டு ஹிப்ஹாப் தமிழா ஆதியிடம் நீங்கள் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே பாடல் வீடியோக்களை நடித்து இயக்கி வந்த ஆதி தன்னிடம் இருந்த கதையை இயக்குநர் சுந்தர்.சியிடம் கூற அவருக்கும் கதை பிடித்து போய் உடனே ஆரம்பிக்கப்பட்ட படம்தான் இந்த ‘மீசைய முறுக்கு’. 40 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட இப்படத்தின் கதை, திரைக்கதை, பாடல்கள், வசனம் எழுதி, இசையமைத்து இயக்கி நாயகனாக நடித்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகன் மற்றும் இயக்குநராக அறிமுகமாகும் இத்திரைப்படத்தை அவ்னி மூவீஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க இளைஞர்களை கவரும் வகையிலான காமடி, கருத்து, காதல், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கல்லூரி கதையாக இருக்கும் என்றும். ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையிலும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
#MeesaiyaMurukku #HipHopThamizha #SundarC #Vivek #AvniMovies #Aambala #TakkaruTakkaru
தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை தயாரித்து வழங்கும் நிறுவனங்களில் ஒன்று சசிகாந்தின் ‘Y NOT STUDIOS....
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் நடித்து வரும் படங்களில் ஒன்று ‘தாராள பிரபு’....
வெற்றிப் பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் எடுப்பது டிரெண்டாகி உள்ள நிலையில் சுந்தர்.சி.இயக்கத்தில்...