இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த 3 ஹீரோக்கள்!

‘தர்மதுரை’ படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராமசாமி மூன்று படங்களை இயக்குவதற்கான கதைகளை கைவசம் வைத்திருக்கிறார்

செய்திகள் 3-Nov-2016 11:41 AM IST Chandru கருத்துக்கள்

இதுவரை 5 படங்களை இயக்கியிருக்கும் சீனு ராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை ஆகிய 3 படங்களில் ஹீரோவாக நடித்திருப்பவர் விஜய்சேதுபதி. இவரைத் தவிர விஷ்ணு விஷால் ‘நீர்ப்பறவை’யிலும், பரத் ‘கூடல்நகர்’ படத்திலும் நாயகனாக நடித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்து வசூல்ரீதியாகவும் வெற்றிபெற்ற ‘தர்மதுரை’ படத்திற்குப் பிறகு தற்போது 3 படங்களை இயக்குவதற்கான கதைகளை தயாராக வைத்துள்ளாராம் சீனு ராமசாமி.

அதில் ஒரு படத்தின் கதையை நடிகர் மம்முட்டியிடம் சொல்லி ஹீரோவாக நடிக்க சம்மதமும் வாங்கிவிட்டாராம். இதுதவிர விஷ்ணு விஷாலை ஒரு படத்திலும், ‘அட்டக்கத்தி’ தினேஷை ஒரு படத்திலும் நாயகனாக நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறாராம் சீனு. இப்படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அடுத்தடுத்து வெளிவரலாம்.

#SeenuRamasamy #Mammootty #VijaySethupathi #NeerParavai #VishnuVishal #AttakathiDinesh #Dharmadurai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;