100 ஏக்கரில் 200 வீடுகள் செட் : ஆச்சரியப்படுத்தும் ‘கடம்பன்’

ஆர்யா நடிக்கும் ‘கடம்பன்’ படத்தின் புதிய தகவல்கள்

செய்திகள் 3-Nov-2016 10:53 AM IST Chandru கருத்துக்கள்

‘மஞ்சப்பை’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ராகவா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘கடம்பன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டீஸரும்தான் இப்போது இணையதளங்களில் ஹாட் டாபிக். இப்படத்தின் காட்டுவாசி கேரக்டருக்காக உண்மையிலேயே உடம்பை இரும்புபோல் உருவாக்கி நிஜ கடம்பனாக கண்முன் நிற்கிறார் ஆர்யா. சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரஸா நடித்துள்ளார். ‘குண்டே’ பாலிவுட் படத்தில் நடித்த தீப்ராஜ் ராணா என்பவர் வில்லனாக இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார்.

கடம்பவனம் என்ற மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களின் பிரச்சனையைப் பற்றி இப்படம் பேசுகிறதாம். ஆக்ஷனும் எமோஷனும் கலந்த இப்படத்தில் கடம்பவனத்தின் பாதுகாவலனாக ஆர்யா நடித்துள்ளார். நிஜ மலைக்கிராமத்தையே ரசிகர்களுக்கு திரையில் காட்ட வேண்டும் என்பதற்காக கொடைக்கானலிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மலைப்பிரதேசத்தில் 100 ஏக்கர் நிலப்பகுதியை வாடகைக்கு எடுத்து, அங்கே 200க்கும் மேற்பட்ட வீடுகள் செட்டை அமைத்து படமாக்கியிருக்கிறார்கள்.

அதேபோல் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிக்காக பேங்காங்கில் உள்ள யானைப் பண்ணை ஒன்றிலிருந்து 50க்கும் மேற்பட்ட யானைகளை வாடகைக்கு எடுத்து படமாக்கியிருக்கிறார்கள். யானைக்கான செலவு மட்டுமே 5 கோடியைத் தாண்டியதாம்.

#Kadamban #Arya #CatherineTresa #Ragava #SuperGoodFilms #YuvanShankarRaja #ManjaPai #DeeprajRana

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவம் ட்ரைலர்


;