சூப்பர்ஸ்டாரின் பிளாக்பஸ்டர் வெற்றிப்பட ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்!

ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ், அவருடைய பிளாக்பஸ்டர் வெற்றிப்படமொன்றின் ரீமேக்கில் நாயகனாக நடிக்கிறார்

செய்திகள் 3-Nov-2016 10:43 AM IST Chandru கருத்துக்கள்

‘காஞ்சனா 2’வின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தற்போது நாகா, மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த 3 படங்கள் தவிர்த்து சூப்பர்ஸ்டார் ரஜினின் ‘மூன்று முகம்’ ரீமேக்கில் நாயகனாக நடிக்கிறார். மிகப்பிரமாண்டமாக ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்த படத்தின் இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படும். ஜிகர்தண்டா படத்தை தயாரித்த ஸ்ரீ மீனாட்சி கிரியேசன்ஸ் எஸ்.கதிரேசன் இந்த பட தயாரிப்பில் உறுதுணையாக இருந்து வருகிறார்.

பில்லா, மாப்பிள்ளை, முரட்டுக்காளை உட்பட ரஜினியின் சில சூப்பர்ஹிட் வெற்றிப்படங்கள் ஏற்கெனவே ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

#MoondruMugam #Rajinikanth #RaghavaLawrence #SriRagavendraProductions #Jagannathan #Kathiresan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;