’ஓடி ஓடி உழைக்கணும்’ டைட்டிலை தொடர்ந்து ‘சக்க போடு போடு ராஜா’

சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’

செய்திகள் 2-Nov-2016 3:50 PM IST VRC கருத்துக்கள்

‘இனிமே இப்படித்தான்’, ‘தில்லுக்கு துட்டு’ ஆகிய படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘சர்வர் சுந்தரம்’ படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து சந்தானம் இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். அதில் ஒன்று வி.டி.வி.கணேஷ் தயாரிக்கும் படம். இன்னொன்று ‘வாசன் விஷுவல் வென்சர்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கும் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படம்! வி.டி.வி.கணேஷ் தயாரிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்குகிறார். பெயர் சூட்டப்படாமல் துவங்கிய இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. சந்தானம், வி.டி.வி.கணேஷ், சம்பத், ரோபோ சங்கர் முதலானோர் நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக சந்தானத்துடன் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வைபவி ஷாந்தில்யாவே நடிக்கிறார். பெயரிடப்படாமல் துவங்கிய இப்படத்திற்கு இப்போது ‘சக்க போடு போடு ராஜா’ என்று தலைப்பு சூட்டியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர்.படப்பாடல் வரியில் அமைந்த ‘ஓடி ஓடி உழைக்கணும்’ டைட்டிலை தொடர்ந்து இப்போது மற்றொரு புகழ்பெற்ற பாடல் வரியான ‘சக்க போடு போடு ராஜா’ சந்தானம் பட தலைப்பாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;