பாடகர் எஸ்.பி.பி.க்கு மத்திய அரசின் கௌரவ விருது!

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு நூற்றாண்டு விருது!

செய்திகள் 2-Nov-2016 3:05 PM IST Top 10 கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளிலாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருப்பவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக சினிமா துறையில் அவர் ஆற்றிவரும் அரும் பணிக்காக அவருக்கு மத்திய அரசு சார்பில் நூற்றாண்டு விருது வழங்கப்படுகிறது. இந்த கௌரவ விருதை வருகிற 20-ஆம் தேதி கோவாவில் துவங்கவிருக்கும் 47-வது சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படவிருக்கிறது. இந்த தகவலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கயா நாயுடு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்லாக மின்னப் போகிறந்து இந்த விருது!

#SPBalasubramaniam #SPB #Sivaji #Superstar #Rajinikanth #KamalHaasan #SPBCharan #47thIFF

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;