‘வேலையில்லா பட்டதாரி’யில் நடித்த ரிஷிகேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ரம்’. அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கியுள்ள இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் விவேக், நரேன், அம்ஜத், அர்ஜுன் ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இப்பட்த்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னியில் நடைபெற்றது. அப்போது அனிருத் பேசும்போது,
‘‘நான் இந்த (ரம்) படத்திற்கு இசை அமைக்கும் வரையில் எந்த ஹாரர் படத்திற்கும் இசை அமைத்ததில்லை. பேய் படம் என்றாலே எனக்கு பயம். நான் பேய் படங்களை பார்த்ததே இல்லை! ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ என்ற ஒரு படத்தை பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் அதை பேய் படம் என்று சொல்ல முடியாது. ‘ரம்’ நான் இசை அமைக்கும் 13-ஆவது படமாகும்! (டேவிட், இரண்டாம் உலகம் ஆகிய படங்களில் தலா ஒரு பாடலுக்கு இசை அமைத்துள்ளது தவிர்த்து….) அதைப் போல ;’ரம் ‘ நான் இசை அமைக்கும் முதல் பேய் படமாகும்! 13 என்ற எண்ணுக்கும் பேய்க்கும் நிறைய சம்பந்தம் இருப்பதாக சொல்வார்கள். அதற்கு ஏற்ற மாதிரி எனது 13ஆவது படம் பேய் படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் ஏழு பாடல்கள் இடம் பெறுகிறது. இதில் கதாநாயகனாக நடித்திருக்கும் ரிஷிகேஷ் மற்றும் இப்படத்தில் பணியாற்றியிருக்கும் அனைவருக்கும் ‘ரம்’ வெற்றிப் படமாக அமையும் என்பது என் நம்பிக்கை! இந்த நம்பிக்கை ஏற்பட முதல் காரணம் இப்படத்தின் அனைத்து (World Wide) ஏரியாக்களும் வியாபாரம் ஆகி விட்டது! தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ‘ரம்’ ஒரே நாளில் வெளியாகவிருக்கிறது’’ என்று பேசினார் அனிருத்!
‘ஆல் இன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் விஜயராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்க, சத்யராஜ எடிட்டிங் செய்துள்ளார். ஷிவ் யாதவ் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தை தமிழகம் முழுக்க ஸ்ரீகாந்தின் ‘ஸ்ரீசாய் சர்க்யூட் 6000’ நிறுவனம் வெளியிடுகிறது.
#Rum #Anirudh #Vivek #Hrishikesh #SanchitaShetty #RumMovieAudioLaunch #Narien
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...