லூசியா, யு டர்ன் பட இயக்குனரின் ஆச்சரியப்படுத்தும் புதிய முயற்சி!

கன்னட இயக்குனர் பவன்குமார் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்

செய்திகள் 2-Nov-2016 11:53 AM IST Top 10 கருத்துக்கள்

‘கிரௌட் பண்டிங்’ என்ற புதிய யுக்தியைப் புகுத்தி ‘லூசியா’ படம் மூலம் இந்திய சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியவர் கன்னட இயக்குனர் பவன்குமார். இப்படம் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படம் தமிழிலும் ‘எனக்குள் ஒருவன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து பவன்குமார் இயக்கிய இரண்டாவது படம் ‘யு டர்ன்’. இப்படமும் வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல், விமர்சகர்கள் மத்தியிலும் பெரிய பாராட்டுக்களைப் பெற்றது. இப்போது இவரின் அடுத்த படம் எப்போது வரும் என தென்னிந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இயக்குனர் பவன்குமாரின் குறும்படப் பேட்டி அறிவிப்பு ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவில் ஸ்டீல் பாலம் ஒன்றைக் கட்டுவதற்காக அங்குள்ள அரசு 800 மரங்களை அழிக்கவிருக்கிறதாம். இதனை எதிர்க்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும் "Steel Flyover Yaake Beda (Why we don’t want the steel flyover)" என்ற பெயரில் ஒரு நிமிட குறும்படத்தை எடுத்து தனக்கு அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் பவன்குமார். அவரை வசீகரிக்கும் மூன்று குறும்படங்களின் இயக்குனர்களுக்கு, தன் அடுத்த படத்தில் தன்னுடன் பணிபுரியும் வாய்ப்பை வழங்கவும் உள்ளாராம்.

#PawanKumar #Lucia #UTurn #EnakkulOruvan #SteelFlyoverYaakeBeda #Short Film

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யூ டர்ன் கர்மா தீம் - வீடியோ


;