அஸ்வின் சேகரை மணப்பதற்கு 8 கண்டிஷன் போட்ட பூர்ணா!

‘மணல்கயிறு-2’ படத்தில் 8 கண்டிஷன் போட்ட பூர்ணா!

செய்திகள் 2-Nov-2016 10:52 AM IST VRC கருத்துக்கள்

கார்ப்பரேட் யுகமாகியுள்ள் இந்த காலகட்டத்தில் திருமணம் செய்ய பெண்கள் முன் வருகையில் அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் மணமகன்களையே பெண்கள் தேர்வு செய்கிறார்கள். அப்படி ஒரு பெண் பூர்ணா. அவர் தனது திருமணத்திற்காக எட்டு கண்டிஷன்களை போடுகிறார். அதனால் மாப்பிள்ளை கிடைக்காமல் அவரது தந்தை எஸ்.வி.சேகர் தவிக்கிறார். இந்த சூழ்நிலையில் விசு மூலம் அஸ்வின் சேகர் மாப்பிள்ளையாக பூர்ணாவை சந்திக்கிறார். பூர்ணா போட்ட எட்டு கண்டிஷன்களையும் ஒப்புக்கொண்டு அஸ்வின் சேகர் மணமகனாகிறார். இந்த அஸ்வின் சேகர் யார்? பூர்ணாவின் 8 கண்டிஷன்களும் நிறைவேறியதா? இதுபோன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாகவும், காமெடியாகவும் பதில் தரும் படமாக உருவாகியுள்ளது ‘மணல்கயிறு-2’.

33 வருடங்களுக்கு முன் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘மணல்கயிறு’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த எஸ்.வி.சேகர், விசு, குரியாகோஸ் ரங்கா ஆகியோர் நடிக்க, அஸ்வின் சேகர், பூர்ணா ஜோடியுடன் ஜெயஸ்ரீ, ஜெகன், டெல்லி கணேஷ், சாம்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணா, ஜார்ஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். ‘யாருடா மகேஷ்’ படத்தை இயக்கிய மதன் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதையை எஸ்.வி.சேகர் எழுதியுள்ளார். மறைந்த நா.முத்துக்குமார் எழுதிய பாடல்களுக்கு தரண் இசை அமைத்திருக்கிறார். ஆத்தியப்பன் படத்தொகுப்பு செய்துள்ளார். ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் என்.ராமசாமி தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

#ManalKayiru2AudioLaunch #ManalKayiru2 #SveSekar #Ashwin #Poorna #Visu #Swaminathan #Charms

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கேம் ஓவர் ட்ரைலர்


;