ரூட்டை மாற்றுகிறாரா ஆக்ஷன் ஹீரோ சசிகுமார்?

வரிசையாக ஆக்ஷன் படங்களாக நடித்து வந்த சசிகுமாரின் அடுத்த படம் காமெடி என்டர்டெயினராக உருவாக உள்ளது

செய்திகள் 2-Nov-2016 10:18 AM IST Chandru கருத்துக்கள்

‘சுப்ரமணியபுரம்’ படம் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் களமிறங்கிய சசிகுமார், அதனைத் தொடர்ந்து வரிசையாக ஆக்ஷன் படங்களாக நடித்து வருகிறார். ‘ஈசன்’ படத்திற்குப் பிறகு இயக்குவதை நிறுத்திவிட்டு, தன் சொந்த தயாரிப்பில் மற்றவர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார் சசிகுமார். அவரின் ‘கம்பெனி புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பாக இதுவரை 8 படங்களை தயாரித்துள்ள சசிகுமார், தற்போது தனது 9வது தயாரிப்பையும் அறிவித்துள்ளார்.

‘பலே வெள்ளையத் தேவா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திலும் சசிகுமாரே நாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ் இப்படத்தை இயக்குகிறார். இதுவரை ஆக்ஷன் படங்களிலேயே தொடர்ந்து நடித்துவரும் சசிகுமார், முதல்முறையாக தன் ரூட்டை மாற்றியுள்ளார். ஆம்.... ‘பலே வெள்ளையத் தேவா’ படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாக சசிகுமார் அறிவித்துள்ளார். படம்குறித்த மற்ற அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#Sasikumar #CompanyProduction #Kidaari #Subramaniyapuram #BaleVellaiyatheva #SolaiPrakash #Eesan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலே வெள்ளையத் தேவா - டீசர்


;