பூஜையுடன் துவங்கியது சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது

செய்திகள் 2-Nov-2016 10:09 AM IST Chandru கருத்துக்கள்

‘நானும் ரௌடிதான்’ பட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன், சூர்யாவை நாயகனாக்கி ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கவிருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, காமெடி ரோலில் ஆர்.ஜே.பாலாஜி கலக்கவிருக்கிறார். ‘நானும் ரௌடிதான்’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திற்கும் அனிருத்தே இசையமைக்கிறார். இப்படம் சூர்யாவுடன் முதல் படமாக அனிருத்திற்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று காலை இப்படத்தின் பூஜை ஸ்டுடியோ கிரீன் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் ஹீரோ சூர்யா, நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா, இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், லிங்குசாமி, பாண்டிராஜ், 2டி என்டர்டெயின்ட்மென்ட்டின் இணை தயாரிப்பாளர் ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘எஸ்3’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துவிட்டதால், விரைவில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.

#ThaanaaSernthaKoottam #Suriya #KeerthySuresh #RJBalaji #Anirudh #VigneshSivan #StudioGreen

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;