பண்டிகை நாள் சென்டிமென்ட்டை தொடரும் ‘பைரவா’ டீம்!

பண்டிகை தினங்களில் தங்கள் படத்தின் ஒவ்வொரு விஷயங்களையும் வரிசையாக வெளியிட்டு வருகிறது ‘பைரவா’ டீம்

செய்திகள் 2-Nov-2016 10:01 AM IST Chandru கருத்துக்கள்

விஜய்யின் ‘பைரவா’ பட படப்பிடிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சமீபத்தில் ஸ்விட்சர்லாந்திற்குச் சென்று பாடல் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறது ஹீரோ விஜய் உள்ளிட்ட படக்குழு. ஒரு சில பேட்ஜ் ஒர்க் வேலைகளை அடுத்த வாரத்திற்குள் முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபடவிருக்கிறார் இயக்குனர் பரதன். இந்நிலையில், படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ‘இளையதளபதி’ ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நாம் விசாரித்ததில் நமக்குக் கிடைத்த தகவலின்படி சந்தோஷ் நாராயணனின் பாடல்களையும், டிரைலரையும்கூட பண்டிகை நாள் ஒன்றில்தான் வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது.

‘பைரவா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிட்டார்கள். அதனைத் தொடர்ந்து படத்தின் டீஸர் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்போது ‘பைரவா’ படத்தின் பாடல்களையும், டிரைலரையும் கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான டிசம்பர் 25ஆம் தேதி வெளியிடவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

அதோடு, ‘பைரவா’ படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

#Bairavaa #Vijay #KeerthySuresh #VijayaProduction #Santhoshnarayanan #Bharathan #Sathish #Ilayathalapthy

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;