‘சென்சாருக்கு பயப்படக்கூடாது!’ – ‘திட்டிவாசல்’ விழாவில் எஸ்.வி.சேகர்

‘கேரவேன் வசதிக்காக தான் இருக்க வேண்டும்!’ – நாசர் பேச்சு!

செய்திகள் 1-Nov-2016 11:40 AM IST VRC கருத்துக்கள்

‘கே.3 சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாஸ் ராவ் தயாரிக்கும் படம் ‘திட்டிவாசல். அறிமுக இயக்குனர் பிரதாப் முரளி இயக்கியுள்ள இப்படத்தில் நாசர் முக்கியமான ஒரு வேடத்தில் நடித்துள்ளார். கதாநாயகர்களாக மகேந்திரன், புதுமுகம் வினோத் ஆகியோர் நடிக்க, கதாநாயகியாக அறிமுகம் தனு ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் அஜய் ரத்னம், அவரது மகன் தீரஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். அண்ணன் தம்பிகளான ஹரீஷ், சதீஷ் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகரும், சென்சார் போர்டு உறுப்பினருமான எஸ்.வி.சேகர் பேசும்போது,

‘‘படத்தை சிக்கணமாக எடுங்கள்! அனாவசிய செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். செலவு செய்யும் பணத்தின் மதிப்பு படத்தில் தெரியவேண்டும். அந்த வகையில் இப்படத்தில் அது தெரிகிறது. இந்த படத்தை தயாரித்திருக்கும் ஸ்ரீனிவாச ராவுக்கு வாழ்த்து சொல்லும்போது இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். தயவு செய்து படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்து விட்டு சென்சாருக்குப் போகாதீர்கள். நான் சென்சார் போர்டு உறுப்பினர் என்ற முறையில் இதனை சொல்கிறேன். காரணம், அப்படி போகும்போது நேர நெருக்கடிக்கு நீங்கள் ஆளாவீர்கள். சென்சாரில் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டிய நிலை வரும். சினிமா எடுப்பவர்கள் சென்சாருக்கு பயப்படக்கூடாது. தம் படைப்பு மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தைரியமாக இருக்க வெண்டும். சட்டப்படியாக தானே படம் எடுக்கிறோம். இது நம் தயாரிப்பு! அதற்காக மற்றவர்களிடம் கெஞ்சக் கூடாது. படத் தயாரிப்புக்கு எடுக்கும் கால அவகாசத்தை போல சென்சாருக்கும் கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் படத்தை பதற்றமில்லாமல் வெளியிட முடியும்’’ என்றார்.

இதனை தொடர்ந்து நடிகர் நாசர் பேசும்போது, ‘‘எனக்கு இந்த படத்தின் கதை பிடித்துவிட்டது. அதனால் இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். பழங்குடியினர் பற்றி படித்திருக்கிறேன். பூர்வகுடி மக்கள் சமகால அரசியல் வாதிகளாலும், பண முதலைகளாலும் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்கிற புரிதல் எனக்கு இருக்கிறது. இந்த படம் அதை சொல்ல வந்தபோது பிடித்தது. அதனால் இதில் நடித்தேன். இப்படத்தில் ரொம்பவும் சிரமப்பட்டுதான் நடித்தேன். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிபும் மலை பிரதேசங்களில் தான் நடைபெற்றது. ஹோட்டல் வசதிகள் இல்லாத அந்த மலை பிரதேசஙக்ளில் நாங்கள் எல்லோரும் ஒரே வீட்டில் ஒரே குடும்பம் போல் தங்கி இருந்து படப்பிடிப்பை முடித்தோம். தயாரிப்பாளர் கேட்ட வசதிகளை எல்லாம் செய்து தர தயாராக தான் இருந்தார். எந்த பட தயாரிப்பாளரும் கஷ்டப்பட கூடாது என்று நினைப்பவன் நான். காரனம் அந்த அனுபவங்களை நான் நேரில் அனுபவித்திருக்கிறேன். படப்பிடிப்பில் கேரவன் போன்றவற்றை எல்லாம் பயன்படுத்தி செலவு அதிகமாக்குகிறார்கள். கேரவன் என்பது இன்று அந்தஸ்தின் குறியீடாக இருக்கிறது. அதனை வசதிக்காக, அவசியம் என்றால மட்டுமே பயன்படுத்த வேண்டும். இப்படத்தில் அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறாகள். அந்த உழைப்பு வீண் போகாது. இப்படம் நிச்சயம் வெற்றிப் படமாக அமையும் என்பது என் நம்பிக்கை’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் இயக்குனர்கள் அரவிந்தராஜ், பிரவீன் காந்தி, நடிகர்கள் மைம் கோபி, பாடகர் கிருஷ், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

#Thittivasal #SVeSekar #MasterMahendran #Nasser #MimeGopi #PradapMurali #Krish #PraveenGandhi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பார்ட்டி அனிமல் கேங் -1 டீஸர்


;