ஹாரிபாட்டர் எழுத்தாளரின் கற்பனையில் வெளிவரும் புதிய படம்!

FANTASTIC BEASTS AND WHERE TO FIND THEM-ஆங்கிலம் மற்றும் தமிழிலும். 2D, 3D மற்றும் IMAX வடிவில், November 18th முதல்!

செய்திகள் 1-Nov-2016 11:03 AM IST Chandru கருத்துக்கள்

கற்பனை உலகில் சஞ்சரிக்கும் வித்தியாசமான, விசித்திரமான பிராணிகள் உலா வரும் திரைப்படங்களுக்கு தனியொரு மவுசு என்றுமே உண்டு! அதுமாதிரியான ஒரு கற்பனை காவியம் தான், FANTASTIC BEASTS AND WHERE TO FIND THEM. Harry Potter எழுத்தாளர் J. K. Rowling என்கிற பெண் எழுத்தாளரின் கற்பனை வளத்தில் உருவான படமிது.

Rowling இன் முந்தய படைப்பான, Harry Potter and the Sorcerer's Stone படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு கதாபாத்திரமான Newt Scamander தான், இப்படத்தின் பிரதான கதாபாதிரம். விலங்கியல் நிபுணரான அவர், விசித்திரமான, வினோதமான குணாதிசயங்கள் கொண்ட சில வகை பிராணிகளை தன் கைப்பெட்டிக்குள் ரகசியமாக வைத்துள்ளார்! எதிர்பாராதவிதமாக அவை திறந்துவிடப்பட, அதன் விளைவுகள் விசித்திரமாக அமைகின்றன.

Tina(Katherine Waterson), Percival Graves(Colin Farrell), Jacob(Dan Fogler) மற்றும் Queeni(Alison Sudol) ஆகிய நால்வர் அணி இதனை சரிசெய்ய முயலுகின்றனர். Newt Scamander வேடத்தில், Oscar விருது பெற்ற நடிகரான, Eddie Redmayne தோன்றியுள்ளார். The Theory of Everything, The Danish Girl போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 4 Harry Potter படங்களை இயக்கி உள்ள David Yates, இப்படத்தையும் இயக்கி உள்ளார். Philippe Rousselot, படத்தின் ஒளிப்பதிவாளர். Oscar விருது பெற்ற Colleen Atwood, உடையாலங்காரங்களை கவனித்துள்ளார். Tim Burke, Christian Manz ஆகிய இருவரும் தந்திர காட்சியமைப்புகளை கையாண்டு உள்ளனர். Oscar விருதிற்காக எட்டு முறை பரிந்துரை செய்யப்பட்ட James Newton Howard படத்தின் இசையமைப்பாளர். இப்படம் Warner Bros. நிறுவனத்தின் மிக பெரிய படைப்பு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;