விஜய்சேதுபதி - சமந்தா : இது ‘ஆரண்யகாண்டம்’ கூட்டணி!

‘ஆரண்யகாண்டம்’ தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் புதியபடமொன்றில் விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர்

செய்திகள் 1-Nov-2016 10:33 AM IST Chandru கருத்துக்கள்

ஒரே ஒரு படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. இவர் இயக்கத்தில் ஜாக்கி ஷெராப், சம்பத், ரவி கிருஷ்ணா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்து 2010ல் வெளிவந்த படம் ‘ஆரண்ய காண்டம்’. இரண்டு தேசிய விருதுகள், உலக திரைப்பட விழா விருதுகள் என பல விருதுகளை வென்ற இப்படம் தியேட்டரிலிருந்து மூன்றே நாட்களில் தூக்கப்பட்டது. திட்டமிடப்படாத ரிலீஸ், முறையான விளம்பரங்கள் செய்யப்படாதது, முறையான தியேட்டர்கள் கிடைக்காதது என ஒரு வித்தியாசமான தமிழ்ப்படத்தை தமிழ் ரசிகர்கள் பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பு கைநழுவிப்போனது. ஆனாலும் ‘ஆரண்யகாண்டம்’ தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் அடுத்த படம் எப்போது வரும் என ஒவ்வொரு ரசிகர்களும் கடந்த 6 வருடங்களாக ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த காத்திருப்பு வீண்போகவில்லை.... புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார் குமாரராஜா.

விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நாயகர்களாக இப்படத்தில் நடிக்கிறார்கள் என்ற செய்தி ஏற்கெனவே வெளிவந்திருந்தது. இப்போது இந்த கூட்டணியில் நடிகை சமந்தாவும் இணைந்திருக்கிறார். இதனை அவரே அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளார். இப்படம் தவிர தமிழில் விஷாலுடன் ‘இரும்புத்திரை’, சிவகார்த்திகேயனுடன் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றில் நாயகியாக நடிக்கிறார் சமந்தா.

#VijaySethupathi #AaranyaKaandam #Samantha #ThiyagarajaKumararaja #FaahadFaazil #Vishal #Irumbuthirai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;