குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியில் கார்த்தியின் ‘காஷ்மோரா’

தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘காஷ்மோரா’ திரைப்படம் உலகமெங்கும் வசூலை வாரிக்குவித்து வருகிறது

செய்திகள் 1-Nov-2016 10:00 AM IST Chandru கருத்துக்கள்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான படைப்பில், கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் நடித்து அக்டோபர் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியான படம் ‘காஷ்மோரா’. ஹிஸ்டாரிக்கல், ஹாரர், காமெடி என குடும்ப ரசிகர்கள் அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இதனால் இப்படம் வெளியான முதல் நாளே பெரிய ஓபனிங் கிடைத்தது. விமர்சனங்கள் இருவேறாக இருந்தபோதும், இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைக்குமளவுக்கு ஃபேன்டஸியாக உருவாக்கப்பட்டிருந்ததால், குடும்பம் குடும்பமாக இப்படத்தை தியேட்டருக்குச் சென்று ரசித்து வருகிறார்கள்.

2ஆம் நாள் தீபாவளி கொண்டாட்ட விடுமுறை என்பதால், படத்தின் வசூல் முதல் நாளைவிட 2ஆம் நாள் வசூல் இரண்டு பங்கு அதிகரித்தது. அதேபோல் 3ஆம் நாள் வசூலும் முதல் நாளைவிட அதிகம். இதனால் முதல் 3 நாட்களில் மட்டுமே இப்படம் தமிழத்தில் மிகப்பெரிய வசூலைக் குவித்தது.

இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானதால் ஆந்திரா, தெலுங்கானாவிலும் ‘காஷ்மோரா’ தமிழ்நாட்டிற்கு நிகரான வசூலை குவித்துள்ளதாம். முதல் 3 நாட்களில் உலகளவில் இப்படம் மிகப்பெரிய வசூலை குவித்துள்ளது. இதுவரை கார்த்தி நடித்த படங்களிலேயே முதல் 3 நாட்களில் மிகப்பெரிய வசூலை குவித்த படமாக ‘காஷ்மோரா’ அமைந்துள்ளது. அதோடு 2016ல் வெளியான படங்களில் முதல் 3 நாள் உலகளவிலான வசூலில் ‘டாப் 5’ லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளது ‘காஷ்மோரா’.

இதுமட்டுமல்லாமல் நேற்று வேலை நாளான திங்கட்கிழமையும் 80% மேல் ‘காஷ்மோரா’ வெளியிட்ட தியேட்டர்கள் நிரம்பியதாக கூறப்படுகிறது. ஹீரோ கார்த்தியும், இயக்குனர் கோகுலும் ‘காஷ்மோரா’வின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் நோக்கத்தில் நேற்று குரோம்பேட்டை வெற்றி தியேட்டருக்கு விசிட் அடித்தனர். ஒட்டுமொத்தமாக இந்த தீபாவளி வெளியீட்டில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக ‘காஷ்மோரா’ அமைந்துள்ளதாக தயாரிப்பு தரப்பு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

#Karthi #Kaashmora #SriDivya #Nayanthara #DreamWarriorPictures #Vivek #SanthoshNarayanan #SRPrabhu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;