பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாகும் அமலா பால்!

‘திருட்டுப் பயலே’ படத்தில் பாபி சிம்ஹாவுடன் இணையும் அமலா பால்!

செய்திகள் 31-Oct-2016 2:47 PM IST VRC கருத்துக்கள்

2006-ல் வெளியாக வெற்றிபெற்ற படம் ‘திருட்டுப் பயலே’. சுசிகணேசன் இயக்கிய இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது என்றும், முதல் பாகத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனமே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது என்றும், இப்படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள் என்ற செய்தியை சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். இப்போது இந்த படத்தில் கதாநாயகி கேரக்டருக்கு அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘திருட்டுப் பயலே’ முதல் பாகத்தில் ஜீவன், அப்பாஸ், மாளவிகா, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடிக்கிறார். அமலா பால் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

#ThiruttuPayale #BobbySimha #AmalaPaul #SusiGanesan #AGSEntertainment #Prasanna #Jeevan #Malavika

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதோ அந்த பறவை போல டீஸர்


;