சந்தானம் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம்!

ஓடி ஓடி உழைக்கும் போலீஸ் அதிகாரியாக சந்தானம்!

செய்திகள் 31-Oct-2016 1:22 PM IST VRC கருத்துக்கள்

தற்போது, பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ‘ஒரு பக்க கதை’ படத்தை தயாரித்து வரும் ‘வாசன் விஷுவல் வென்சர்ஸ்’ நிறுவனத்தின் அடுத்து தயாரிப்பாக உருவாகும் படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு எம்.ஜி.ஆர். படப் பாடலான ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்ற தலைப்பை சூட்டியிருக்கிறார்கள். சந்தானம் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய கே.எஸ்.மணிகண்டன் இயக்குகிறார். இதில் சந்தானம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சந்தானத்துடன் கதாநாயகியாக அமைரா டஸ்டர் நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஆனந்தராஜ், எம்.எஸ்.பாஸ்கர், ‘யோகி’ பாபு, மயில்சாமி, கோவை சரளா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவுக்கு கோபிநாத், இசைக்கு ஜிப்ரான், கலை இயக்கத்துக்கு வனராஜ் என கூட்டணி அமைத்துள்ள இப்படத்தின் பூஜை கடந்த 28-ஆம் தேதி நடந்தது. படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் துவங்கி தொடர்ந்து 25 நாட்கள் சென்னையில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;