பாலுமகேந்திரா உதவியாளர் இயக்கும் படம்!

பாலுமகேந்திராவின் சிஷ்யர் இயக்கும் ‘தப்பு தண்டா’

செய்திகள் 31-Oct-2016 1:08 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணிபுரிந்த ஸ்ரீகண்டன் இயக்கும் படம் ‘தப்பு தண்டா’. ‘கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் சத்யமூர்த்தி தயாரித்து வரும் இப்படத்தில் சத்யா, சுவேதா கய் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ‘மைம்’ கோபி, ஜான் விஜய், அஜய்கோஷ், ஈ.ராமதாஸ், ‘மெட்ராஸ்’ ரவி, மகேந்திரன், நாகா, சஞ்சீவி, அஷ்மிதா பிரியா, ஜீவா ரவி, ஆத்மா உட்பட பலர் நடிக்கிறார்கள். நகைச்சுவை கலந்த கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் ஒளிப்பதிவை வினோத் பார்தி கவனிக்க, நரேன் பாலகுமார் இசை அமைக்கிறார். ‘சதுரங்கவேட்டை’ படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்த எஸ்.பி.ராஜா எடிட்டிங் செய்கிறார்.

‘‘நாட்டில் ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும்போதும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது இப்போது வழக்கமாக இருந்து வருகிறது. அப்படி மக்களுக்கு கொடுக்க எடுத்துச் செல்லும் கோடிக்கணக்கான பணத்தை நான்கு இளைஞ்ரகள் கொள்ளை அடித்து சென்ரு விடுகிறார்கள். அதன் பிறகு நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் ‘தப்பு தண்டா’ படம்’’ என்கிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன்.

#BaluMahendra #Srikandan #ThappuThanda #Sathyamoorthy #MimeGopi #JeevaRavi #Aathma #Ashmitha

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை என்கிற மெட்ராஸ் - டிரைலர்


;