ஆர்யாவுடன் இணையும் சூர்யா, கார்த்தி விஷால்!

‘கடம்பனி’ல் ஆர்யாவுக்கு கை கொடுக்கும் சூர்யா, கார்த்தி விஷால்

செய்திகள் 31-Oct-2016 12:57 PM IST VRC கருத்துக்கள்

ஆர்யா நடித்து வரும் ‘கடம்பன்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ‘மஞ்சபை’ படத்தை இயக்கிய ராகவன் இயக்கி வரும் இப்படத்தில் ஆர்யா இதுவரை ஏற்றிராத ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறார். ஆர்யாவுடன் கேத்ரின் தெரெசா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் போஸ்டரும், டீஸரும் இன்று மாலை வெளியாகவிருக்கிறது. ஆர்யாவின் ‘கடம்பனி’ன் முதல் போஸ்டரை நடிகர்கள் கார்த்தி, விஷால் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை 5.30 மணி அளவில் வெளியிடுகிறார்கள். டீஸரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் 6 மணிக்கு வெளியிடுகிறார். ஆர்யா நடிப்பில் படம் வெளியாகி சில மாதங்களாகியுள்ள நிலையில் அவரது நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் ‘கடம்பன்’ மீது ரசிகர்களிடையே ஒருவித ஏதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ‘கடம்பனு’க்கு டி.இமான் இசை அமைக்கிறார். எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ‘அரசு ஃபிலிம்ஸ்’ சார்பில் ஹர்சத் ஹாஜா தயாரித்து வரும் ‘கடம்பன்’ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Arya #Kadamban #ManjaPai #Ragavan #Vishal #Suriya #Karthi #DImman #SRSathishkumar #ArasuFilms

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;