‘த்ரிஷா இல்லானா நயன்தாரா’ எனும் வெற்றிப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ சி.ஜே.ஜெயக்குமார் தற்போது தயாரித்து வரும் படம் ‘இமைக்கா நொடிகள்’. அஜய் ஞானமுத்து இயக்கி வரும் இப்படத்தில் அதர்வா, நயன்தாரா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யாப் என பல முன்னணி கலைஞர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் தயாரிப்பில் இருந்து வரும் சி.ஜே.ஜெயக்குமார், விஷால், தமன்னா நடிக்கும் ‘கத்திசண்டை’ படத்தின் தமிழக விநியோக உரிமையை கைபற்றியுள்ளார். ‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ நிறுவனம் சார்பில் நந்தகோபால் தயாரித்து வரும் ‘கத்திசண்டை’யை சுராஜ் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் விஷால், தமன்னாவுடன் ஜெகபதிபாபு, வடிவேலு, சூரி சம்பத்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைத்துள்ளார். இறுதிகட்ட பணிகளில் இருந்து வரும் கத்திசண்டை படத்தை அடுத்த மாதம் (நவம்பர்) வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
#Kaththisandai #Vishal #Tamannah #Soori #Vadivelu #CameoFilms #JagapathiBabu #HipHopThamizha
இளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘இளையராஜா 75’ என்ற பெயரில் மிகப்பெரிய பாராட்டுவிழா ஒன்றை...
இளையராஜா-75’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இளையாராஜா குறித்து பேசிய விவரம்...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ‘இளையராஜா 75’ விழா பிப்ரவரி 2,3 தேதிகளில் சென்னை...