அனிருத்தின் ‘ரம்’ பாடல்கள் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நவம்பர்-2ல் அனிருத்தின் ‘ரம்’ பாடல்கள்!

செய்திகள் 27-Oct-2016 11:43 PM IST VRC கருத்துக்கள்

‘வேலையில்லா பாட்டதாரி’ பட புகழ் ரிஷிகேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ரம்’. அறிமுக இயக்குனர் சாய் பரத் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் விவேக், ‘அஞ்சாதே’ நரேன், மியா ஜியார்ஜ், அம்ஜத் முதலானோரும் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வருகிற நவம்பர் 2-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இப்படத்திற்காக அனிருத் இசையமைப்பில் 'பேயோபோபிலியா' என்று துவங்கும் ஒரு பாடலை சிம்பு பாடியிருக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். ‘ரெமோ’ படப்பாடல்களுக்கு அடுத்தபடியாக அனிருத் இசை அமைப்பில் வெளியாகவிருக்கும் ‘ரம்’ பாடல்கள் குறிப்பாக இளைஞர்களை கவரும் விதம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ சார்பில் விஜயராகவேந்திரா தயாரிக்கும் ‘ரம்’மின் ஒளிப்பதிவை விக்னேஷ் வாசு கவனிக்கிறார்.

#Remo #Anirudh #SaiBharath #Hrishikesh #Vivek #SanchithaShetty #AmzathKhan #HolaAmigo

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;