பட தயாரிப்பில் இருந்து விலகும் பிரபு சாலமன்!

இனி படங்களை தயாரிக்க மாட்டேன்! – பிரபு சாலமன்

செய்திகள் 27-Oct-2016 11:50 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் பிரபு சாலமனின் ‘காட் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ரூபாய்’. பிரபுசாலமனின் சிஷ்யரும் ‘சாட்டை’ படத்தை இயக்கியவருமான அன்பழகன் இயக்கியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது இயக்குனரும், தயாரிப்பாளருமான பிரபு சாலமன் பேசும்போது,

‘‘ஒரு படத்தை இயக்குவதை விட ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது சாதராண காரியம் இல்லை. இதை நான் எப்போதே புரிந்துகொண்டுள்ளேன். இந்த ‘ரூபாய்’ படத்தை தயாரிக்க முன் வந்தது அன்பழகனுக்காக தான். ‘சாட்டை’ எனும் நல்ல ஒரு படத்தை கொடுத்தும் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரவில்லை. அன்பழகன் திறமையானவர். நல்ல கதைகளை வைத்திருக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. அதனால் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று தான் இப்படத்தை தயாரித்தேன். இனி நான் என் ‘காட் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் படங்களை தயாரிக்கப் போவதில்லை. இப்போது தமிழ் சினிமாவில் திரைப்படங்களை தயாரிக்க இணக்கமான சூழல் இல்லை! இந்த சூழல் இருக்கும் வரை நான் படங்களை தயாரிக்க மாட்டேன்’’ என்றார்.

‘ரூபாய்’ படத்தில் ‘கயல்’ சந்திரன், ஆனந்தி ஜோடியாக நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார்.

#Rubaai #KayalChandran #Anandhi #Kayal #PrabhuSolomon #Saattai #Anbazhagan #DImman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அலாவுதீனின் அற்புத கேமரா ட்ரைலர்


;