போக்கிரி, ஜில்லா படங்களைத் தொடர்ந்து ‘பைரவா’ மூலம் மீண்டும் பொங்கலுக்கு களமிறங்குகிறார் ‘இளையதளபதி’ விஜய். பெரும்பாலான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து படத்தின் டப்பிங், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. முதல்முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கும் சந்தோஷ் நாராயணனின் ‘பைரவா’ பாடல் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘பைரவா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார்கள். அதனைத் தொடர்ந்து இப்போது தீபாவளியை முன்னிட்டு படத்தின் டீஸரை இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு (அதாவது 28&10&2016 அதிகாலை) வெளியிடவிருக்கிறார்கள்.
இந்த டீஸர் தீபாவளியின் ரிலீஸாகும் படங்களோடு தியேட்டரிலும் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Vijay #KeerthySuresh #Bairavaa #Bharathan #VijayaProduction #SanthoshNarayanan #Suriya #Singam3 #Hari
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
‘K-13’ படத்தை தொடர்ந்து அருள்நிதி, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் 90-வது படமாக உருவாகி வரும்...