‘ஒவ்வொரு ஆண்டும் அப்பா பிறந்த நாளில் ஓவியப் போட்டி’ – நடிகர் சூர்யா

‘ஒவ்வொரு ஆண்டும் அப்பா பிறந்த நாளில் ஓவியப் போட்டி’ – நடிகர் சூர்யா

செய்திகள் 27-Oct-2016 10:47 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் சிவகுமாரின் 75-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை லலித்கலா அகாடமியில் சிவகுமார் வரைந்த ஓவியங்களின் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் சிவகுமாரின் Paintings Of Siva Kumar’ புத்தக வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. நடிகர் சூர்யா முன்னிலையில் தமிழ் அருவி மணியன் இப்புத்தகத்தை வெளியிட்டார். இவ்விழாவில் Alliance ஸ்ரீநிவாசன், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், இயக்குநர் வசந்த் , கவிஞர், எழுத்தாளர் அறிவுமதி, டாக்டர் சொக்கலிங்கம் , ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர், ஓவியர் தியாகு, நடிகை ரம்யா பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்ல கண்ணு, கவிஞர் பிரபஞ்சன், தனஞ்சயன், கவிதாலயா கிருஷ்ணன், பத்மஸ்ரீ சந்திர சேகர் உட்பல பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சூர்யா பேசும்போது, ‘‘அப்பாவிற்கு எப்போதும் பிறந்த நாளை கொண்டாடுவது பிடிக்காது. சென்ற வருடம் பிறந்த நாள் கொண்டாடலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர் பழநி முருகன் கோவிலுக்கு சாமியை தர்சிக்க சென்றுவிட்டார். இந்த வருடம் அவருடைய 75வது பிறந்த நாள். இந்த பிறந்த நாள் அவருக்கு மிகச்சிறப்பான பிறந்த நாள் ஆகும். இந்த நாளை நாங்கள் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் அனைவருக்கும் என்றும் நினைவிருக்கும் பிறந்த நாளாக மாற்ற வேண்டும் என்று யோசித்து இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்தோம். கண்காட்சிக்கு இப்போது நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. கண்காட்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பை கருத்தில் கொண்டு மேலும் இரண்டு நாட்கள் கண்காட்சியை தொடர முடிவு செய்துள்ளோம். இந்த ‘காபி டேபிள் புத்தகம்’ மிக முக்கியமான புத்தகம். இந்நாளை குறிக்க இந்த புத்தகத்தை இன்று வெளியிட்டு உள்ளோம். இராமாயணம், மகாபாரததுக்கு பிறகு இப்போது திருக்குறளை பேச தயாராகி வருகிறார் அப்பா. இனி வருடம்தோறும் அப்பாவின் பிறந்த நாள் அன்று ஓவிய போட்டி ஒன்றை நடத்தி அதில் வெற்றி பெறுபவருக்கு பரிசு வழங்கப்படும்’’ என்றார்.

சிவகுமார் பேசும்போது, ‘‘எனக்கு என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதில் விருப்பமே இல்லை. இவர்கள் தான் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர். படைப்பாளனை விட படைப்புகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் படைப்புகள் தான் காலம் கடந்து நிற்கும். இப்போது அனைவரும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பல ஆயிரம் ருபாய் செலவழித்து சாப்பிடுகிறார்கள். நானெல்லாம் அக்காலத்தில் வெறும் ஏழாயிரம் ரூபாய் செலவில் திருச்சியில் இருந்து கன்னியாகுமரி வரை பயணித்து வரைந்தேன். இப்போதெல்லாம் அப்படி இருக்க முடியாது. இந்த விழாவை இவ்வளவு சிறப்பாக நடத்திய என்னுடைய மகன்கள் மற்றும் இன்னொரு மகனான தனஞ்ஜெயனுக்கு நன்றி’’ என்றார்.

#Sivakumar #Suriya #Karthi #Jyothika #Singam3 #Kaashmora #PaintingsOf SivaKumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;