நடிகர் ஷாமுக்கு உற்சாகம் தரும் தீபாவளி!

தீபாவளி வெளியீடாக வரும் ஷாம் நடித்த படம்!

செய்திகள் 26-Oct-2016 4:54 PM IST VRC கருத்துக்கள்

தற்போது ‘காவியன், படத்தில் நடித்து வருகிறார் ஷாம்! இவர் நடித்த எந்த படமும் தீபாவளி வெளியீடாக வந்ததில்லை. ஆனால் இந்த ஆண்டு தீபாவளி ஷாமுக்கு பெரும் மகிழ்ச்சி தரும் தீபாவளியாக அமையவிருக்கிறது. இதற்கு காரணம் ஷாம் நடித்த கன்னட படமான ‘ஸ்ட்ரெய்ட் ஃபார்வார்ட்’ என்ற படம் தீபாவளியன்று வெளியாகிறது. ஆனால் இது ஷாம் கதாநாயகனாக நடித்த படம் இல்லை! எதிர் நாயகனாக நடித்த படம். இதில் கதாநாயகனாக கன்னட முன்னணி நடிகர்களில் ஒருவரான யஷ் நடித்திருக்க, கதாநாயகியாக ராதிகா பண்டிட் நடித்துள்ளார். மகேஷ் ராவ் இயக்கியிருக்கிறார். இப்படம் ஷாம் கன்னடத்தில் நடிக்கும் மூன்றாவது படமாகும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷாம்.

‘‘இதுவரை நான் நடித்த எந்த படமும் தீபாவளிக்கு வெளியானதில்லை. ஆனால் நான் நடித்துள்ள கன்னட படமான ‘ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்’ தீபாவளிக்கு வெளியாகிறது. எனவே இந்த தீபாவளி எனக்கு உற்சாகமான தீபாவளியாகியிருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

#Shaam #Kaaviyan #StraightForward #Yash #RadhikaPandit #MaheshRao

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜாம்பி ட்ரைலர்


;