சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ்?

தனுஷை இயக்குகிறாரா சௌந்தர்யா ரஜினிகாந்த்?

செய்திகள் 26-Oct-2016 3:23 PM IST VRC கருத்துக்கள்

‘கோச்சடையான்’ படத்தை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. பெரும் வெற்றிபெற்ற ‘தெறி’, ‘கபாலி’ படங்களை தொடர்ந்து ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் புதிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு உருவாகிறது என்றும், இப்படத்தில் நடிக்கவும், பணியாற்றவும் தகுதியானவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என்றும் அது சம்பந்தப்பட்டு விளம்பரங்களை செய்திருந்தனர். ஆனால் இப்போது ஒரு புதிய திருப்பமாக இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தனுஷ் இயக்கி, தயாரித்து நடித்து வரும் ‘பவர் பாண்டி’ படத்தின் வேலைகள் முடிந்ததும் சௌந்தர்யா இயக்கத்தில் இப்படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இப்படக்குழுவினரிடமிருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இந்த படத்திற்கு இசை அமைப்பாளராக ஷான் ரோல்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;