விஜய்சேதுபதி நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் ‘மெல்லிசை’. இயக்குனர் ராமின் உதவியாளர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி வரும் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டது. இதனை தொடர்ந்து இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ் குமார் வெளியிடவிருக்கும் இப்படத்திற்கு இப்போது ‘புரியாத புதிர்’ என்று புதிய தலைப்பை சூட்டியிருக்கிறார்கள். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய முதல் படம் ‘புரியாத புதிர்’. ரகுவரன், ரேகா முதலானோர் நடித்த இப்படம் 1990-ல் வெளியானது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவன்ம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்த படம் புரியாத புதிர். இப்போது அந்த பட தலைப்பில் விஜய்சேதுபதி நடித்த படம் வெளியாகவிருக்கிறது. விஜய்சேதுபதி, காயத்ரி ஜோடியாக நடித்துள்ள இப்படத்திற்கு சாம்.சி இசை அமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
#VijaySethupathi #Gayathiri #Mellisai #PuriyathaPuthir #RanjithJayakodi #JSKFilms #KSRavikumar
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘96’. பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான இப்படம்...