இரண்டு கதாநாயகர்கள் வில்லன்களாக நடிக்கும் படம்!

‘கங்காரு’, ‘குற்றம் கடிதல்’ பட கதாநாயகர்கள் வில்லன்களாக நடிக்கும் ‘முன்னோடி’

செய்திகள் 25-Oct-2016 3:18 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் எஸ்.பி.டி.ஏ.குமார் இயக்கியிருக்கும் படம் ‘முன்னோடி’ எஸ்.பி.டி.ஏ.ராஜசேகர், சோஹம் அகர்வால இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் தெலுங்கில் வளர்ந்து வரும் ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ‘கங்காரு’ படத்தில் நாயகனாக நடித்த அர்ஜுனா, ‘குற்றம் கடிதல்’ படத்தில் கதையின் நாயகனை போன்ற கேரக்டரில் நடித்த பாவல் நவகீதன் இருவரும் வில்லன்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஷிஜாய் வர்கீஸ், நிரஞ்சன், சுரேஷ், தமன், வினுகிருதிக், சித்தாரா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

‘‘ஒருவன் யாரை முன்னோடியாக கொண்டு பின் பற்றுகிறானோ அதை பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ, தாழ்வாகவோ அமையும். வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம் என்கிற கருத்தை முன் வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் இது’’ என்கிறார் இயக்குனர் எஸ்.பி.டி.ஏ.குமார்.

இந்த படத்திற்கு வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்கிறார். கே.பிரபு சங்கர் இசை அமைக்கிறார். எடிட்டிங் பணிகளை சுதா கவனித்து வருகிறார். இந்த படத்தை டிசம்பர் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

#Munnodi #SBDAKumar #SohamAgarwal #YaminiBaskar #Gankaru #Arjuna #PaavalNavageethan #Siththaara

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;