வயதான கெட்-அப்பில் ‘நெருப்புடா…’ பாடலாசிரியர்!

‘மரகத நாணயம்’ படத்தில் நடிகராக களமிறங்கும் பாடலாசிரியர்!

செய்திகள் 25-Oct-2016 11:30 AM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கி வரும் படம் ‘மரகத நாணயம்’. ‘யாகவராயினும் நா காக்கா’ படத்தை தொடர்ந்து ஆதி, நிக்கி கல்ராணி இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் திபு இசை அமைக்கிறார். இந்த படத்திற்காக ‘நெருப்புடா…’ பாடல் புகழ் அருண்ராஜா காமராஜ் ஆடுகளை மையப்படுத்தி ஒரு பாடலை எழுதியிருக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இப்போது அருண்ராஜா காமராஜ் இப்படத்தில் முக்கியமான, வயதான ஒரு கேரடக்டரில் நடிக்கவும் செய்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ‘ராஜா ராணி’, ‘மான் காராத்தே’, ‘பென்சில்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் அருண்ராஜா காமராஜ் ‘மரகத நாணயம்’ படத்தில் நடிப்பது குறித்து கூறும்போது,
‘‘முதன் முதலாக இப்படத்தில் வயதான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நரை முடியோடு தோன்றும் என்னுடைய இந்த கதாபாத்திரம் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒலி மற்றும் குரலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் குரல் மாற்றி பேசும் திறமை கொண்ட எனக்கு நடிக்க பெரிதும் எளிதாக இருக்கிறது’’ என்று தனது கதாபாத்திரம் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். ‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

#Kabali #ArunrajaKamaraja #Neruppuda #Rajinikanth #ARKSaravanan #MaragathaNaanayam #Aadhi #NikkiGalrani

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;