தியாகரஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, நிவின்பாலி, ஃபஹத் ஃபாசில்?

ஆரண்யகாண்டம் இயக்குனரின் ஆடுத்த படம்?

செய்திகள் 25-Oct-2016 11:16 AM IST VRC கருத்துக்கள்

2011-ஆம் ஆண்டில் தியாகராஜன் குமாரராஜ இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும் பேசப்பட்ட படம் ‘ஆரண்ய காண்டம்’. அத்துடன் இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளும் கிடைத்தன. இந்த படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா அதற்கு பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தனது இரண்டாவது பட வேலைகளில் பிசியாகியுள்ளார் தியாகராஜன் குமாரராஜா. ஐந்து வருட இடைவெளிக்கு பிறகு இவர் இயக்கப் போகும் அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் இரண்டு ஹீரோக்கள் கொண்டதாம்! இதில் ஒரு ஹீரோவாக நடிக்க விஜய்சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும் இரண்டாவது ஹீரோவுக்காக மலையாள நடிகர்களான நிவின் பாலி, ஃபஹத் ஃபாசில் ஆகியோரிடம் பேசப்பட்டு வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இயக்குனர் தரப்பிலிருந்து இது குறித்த எந்த அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#VijaySethupathi #FaahadFazil #NivinPauly #ThiyagarajaKumararaja #AaranyaKaandam #Rekka #Dharmadurai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;