‘தரமணி’ பாடல் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ராமின் ‘தரமணி’ ரிலீஸ் எப்போது?

செய்திகள் 24-Oct-2016 3:40 PM IST VRC கருத்துக்கள்

ராம் இயக்கி வரும் ‘தரமணி’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ‘ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் சார்பில் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் தயாரிக்கும் இப்படத்தில் புதுமுகம் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்க, ஆன்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அஞ்சலி ஒரு கெஸ்ட் ரோலிலும் அழகம் பெருமாள் ஒரு முக்கியமான கேரக்டரிலும் நடிக்கின்றனர். இசைக்கு யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவுக்கு தேனி ஈஸ்வர், படத்தொகுப்புக்கு ஸ்ரீகர் பிரசாத் என பெரும் கலைஞர்கள் கூட்டணி அமைத்துள்ள இப்படத்தின் டீஸர் ஒரு சில நாட்களுக்கு முன் வெளியானது. இப்போது பட வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதால் இப்படத்தின் பாடல்களை நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்கள். இதனை தொடர்ந்து படத்தை டிசம்பர் 23-ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிரார்கள். ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராம் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இப்படம் மீது ஒருவித எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

Taramani, Raam, Thanga Meengal, Andrea, Anjali, Yuvan Shankar Raja, Theni Eeshwar, Vasanth Ravi

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;