சிபிராஜ் நடித்து வரும் ‘கட்டப்பாவை காணோம்’ திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தில் நடித்து கொண்டிருக்கும்போதே சிபிராஜ் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதாவது, தனது அடுத்த படம் விஜய் ஆண்டனி நடிப்பில் ‘சைத்தான்’ படத்தை இயக்கி வரும் பிரதீப் கிருஷ்ண்மூர்த்தி இயக்கத்தில் தான் என்று! சிபிராஜின் ‘கட்டப்பாவை காணோம்’ பட வேலைகளும், பிரதீப் கிருஷ்ணமூர்த்தியின் ‘சைத்தான்’ பட வேலைகளும் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்குமாம்! இப்படத்தின் கதாநாயகி கேரக்டருக்கு ரம்யா நம்பீசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அத்துடன் இப்படம் தெலுங்கு வெற்றிப் படமான ‘கஷாண’த்தின் ரீ-மேக் என்று சொல்லப்பட்டு வந்த தகவலை மறுத்துள்ளார் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி! இது அவர் நேரடியாக உருவாக்கியிருக்கும் கதையாம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் அதிகாரபூர்வமான தகவல்கள் அடங்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.
#Sibiraj #KattapavaKaanom #RamyaNambeesan #Sethupathi #PradeepKrishnamoorthy #Saithan #VijayAntony
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
அசோக் செல்வன், ரித்விகா சிங் இணைந்து நடிக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம்...