நவம்பர் 7-ஆம் தேதி நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள்! ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளை தனது நற்பணி மன்றத்தினருடன் பல்வேறு நற்பணிகள் செய்து கொண்டாடுவது கமல்ஹாசனின் வழக்கம். ஆனால் இந்த வருட பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் ‘‘நற்பணி இயக்க தோழர்களுக்கு கோரிக்கை! தமிழக முதல் அமைச்சர் உடல்நலம் இவ்வாறு இருக்க, என் பிறந்த நாள் விழாக்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது ‘சபாஷ் நாயுடு’ படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அதன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டார். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டு மாடிப்படியில் இறங்கியபோது படிக்கட்டில் தவறி விழுந்தார். இதில் அவரது கால் எலும்பு முறிந்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதனை தொடர்ந்து தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் கமல்ஹாசன் விரைவில் ‘சபாஷ் நாயுடு’வின் படப்பிடிப்பை மீண்டும் துவங்கவுள்ளார்.
#KamalHaasan #SabashNaidu #UttamaVillain #Papanasam #Ulaganayagan #Vishwaroopam2 #ShrutiHaasan
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...
மாநகரம், கைதி ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி...
‘2.0’ படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கி வரும் படம் ‘இந்தியன்-2’. கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா...