‘காஷ்மோரா’ ரிலீஸில் சாதனை படைக்கும் கார்த்தி!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் கார்த்தியின் ‘காஷ்மோரா’ படம் உலகளவில் 1700 ஸ்கிரீன்களில் திரையிடப்படுகிறது

செய்திகள் 24-Oct-2016 10:56 AM IST Chandru கருத்துக்கள்

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 28ஆம் தேதி ரிலீஸாகிறது கார்த்தியின் ‘காஷ்மோரா’. இரண்டு வருட கடுமையான உழைப்பில், மிக அதிக பொருட்செலவில், பல்வேறு செட்களை அமைத்து, 2000க்கும் அதிகமான சிஜி ஷாட்களை உருவாக்கி பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை கோகுல் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இரட்டை வேடம், 3 கெட்அப் என கார்த்தி வித்தியாசமாக நடித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நாயகிகளாக நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் ‘காஷ்மோரா’ ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்புகளால் உலகமெங்கும் 1700 ஸ்கிரீன்களில் இப்படத்தை ரிலீஸ் செய்கின்றனர். காஷ்மோராவின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனமும், தெலுங்கு பதிப்பிற்கான ஆந்திரா, தெலுங்கான உரிமையை பிவிபி நிறுவனமும், யுஎஸ்ஏ வெளியீட்டு உரிமையை சினிகோலக்ஸி நிறுவனமும், மலேசிய வெளியீட்டு உரிமையை டி.எஸ்.ஆர். நிறுவனமும் கைப்பற்றியுள்ளன. மலேசியாவில் மட்டுமே 103 ஸ்கிரீன்களில் திரையிடப்படவிருக்கிறது காஷ்மோரா.

ஒட்டுமொத்தமாக கார்த்தியின் கேரியரிலேயே அதிகபட்ச எண்ணிகையில் வெளியாகவிருக்கிறது ‘காஷ்மோரா’ திரைப்படம்.

#Karthi #Kaashmora #SriDivya #Nayanthara #Gokul #SriThenandalFilms #DreamWarriorPictures #SRPrabhu #SRPrakashBabu #Vivek

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;