விஜய், சூர்யாவைத் தொடர்ந்து கீர்த்தியின் அடுத்த ஹீரோ?

விஜய்யுடன் ‘பைரவா’, சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களில் நடிக்கும் கீர்த்தி சுரேஷியின் புதிய ஹீரோ?

செய்திகள் 24-Oct-2016 10:18 AM IST Chandru கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரெமோ’. இந்த படத்தின் வெற்றி தந்த சந்தோஷத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார் கீர்த்தி. அதோடு, விஜய்யுடன் கீர்த்தி நடிக்கும் ‘பைரவா’ படமும் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் ‘சண்டக்கோழி’ படத்தின் 2ஆம் பாகத்தில் நடிக்கவும் கீர்த்தி சுரேஷுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம்.

மற்ற படங்களின் கால்ஷீட் நிலவரங்களை சரிசெய்துவிட்டு, ‘சண்டக்கோழி 2’வுக்கான தேதிகளை கீர்த்தி சுரேஷ் ஒதுக்குவார் எனத் தெரிகிறது. இப்படத்தில் நாயகியாக நடிக்க மஞ்சிமா மோகனிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம்.

#Vijay #KeerthiSuresh #Bairavaa #Suriya #ThaanaSernthaKoottam #VigneshSivan #Remo #SivaKarthikeyan #Vishal #Sandakozhi2 #Lingusamy

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;